உண்ணாவிரதத்துக்கு, இதய நோய்க்கும் தொடர்பா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Intermittent Fasting : உடல் எடையை குறைப்பதற்கும், உடலை ஃபிட்டாக வைப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தேவையான உணவு உட்கொண்டு மற்ற நேரங்கள் உண்ணாவிரதம் இருப்பது என்பது பிரபலமான ஒரு யுத்தி ஆகும். அதன்படி, உடல் எடையை குறைப்பதற்காக பலர் அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில், உண்ணாவிரதம் இருப்பது குறித்து மருத்துவ ஆய்வில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More – உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

இதுதொடர்பாக சிகாகோவில் தி அமெரிக்கன் இதய கூட்டமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வு அறிக்கையில், உடல் பருமனை குறைக்க நாளொன்றுக்கு 16 மணி நேரம் வரை உண்ணாவிரதம் இருந்துவிட்டு மீதமுள்ள 8 மணிநேரத்தில் சாப்பிடும் “Intermittent Fasting” என்ற நடைமுறையை பின்பற்றுவோருக்கு இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயம் 91% அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More – சிலிண்டர் விலை ரூ.500 குறைக்கப்படும்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுக!

இது ஆய்வு அறிக்கையில் உள்ள தகவல்கள் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளை யோசிக்க வைத்துள்ளது. ஆனால், இந்த ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களும், உடல் எடையை குறைக்க நினைப்பர்வகளையும் உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் மூலம் தான் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பது இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் இருப்பது கண்டறிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஷாங்காய் ஜியாவ் டோங் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் விக்டர் ஜாங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையில் சேர்க்கப்பட்ட சுமார் 20,000 பேரிடம் இருந்து தரவை ஆய்வு செய்தனர்.

Read More – திமுக வேட்பாளர் வெளியீடு! எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி? 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

இதில், நோயாளிகளில் பாதி பேர் ஆண்கள் மற்றும் சராசரி 48 வயதாகும். நோயாளிகள் உண்ணாவிரதத்தை எவ்வளவு காலம் தொடர்ந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும், அடிக்கடி எடுக்கும் உண்ணாவிரதம் முறைக்கும், இதய நோய் பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், சில மருத்துவர்கள் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்