தோனியை போல ஷிகர் தவானும் 5 முறை விக்கெட்டை இழந்தார்..!

தென்னாபிரிக்கா அணிக்கும் , இந்திய அணிக்கும் இடையே நேற்று மொஹாலியில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.

பிறகு இறங்கிய இந்திய அணி  3 விக்கெட்டை இழந்து 19 ஒவரிலே 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில்  தொடக்க வீரரான ஷிகர் தவான் 40 ரன்னில் வெளியேறினார். மேலும் சர்வேதேச டி20 போட்டியில் 5 முறை 40-ஸில் ஷிகர் தவான் தனது  விக்கெட்டை இழந்து உள்ளார்.

இதற்கு முன் முன்னாள் கேப்டன் தோனியும் சர்வேதேச டி20 போட்டியில் 40-ஸில் 5 முறை விக்கெட்டை இழந்து இருந்தார். தற்போது இருவரும் சமனில் உள்ளனர்.

author avatar
murugan