தீபஒளி திருநாளில் எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுங்கள் – பிரதமர் மோடி!

தீபஒளி திருநாளில் எல்லையிலுள்ள ராணுவ வீரர்களுக்காக விளக்கேற்றுங்கள் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

நாடு முழுவதிலும் இன்று தீபாவளித் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதற்கு மக்கள் நலன் கருதி அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் மக்களின் சந்தோஷத்திற்காக பாதுகாப்புடன் சில கட்டுப்பாடுகளை அறிவித்து அரசு அனுமதித்துள்ளது. மக்கள் மிக மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி வரக்கூடிய இந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்த தீபாவளித் திருநாளில் நம் தேசத்தை அச்சமின்றி எல்லையில் நின்று பாதுகாக்கக்கூடிய ராணுவ வீரர்களுக்காக ஒரு விளக்கை ஒளிர செய்வோம் என கூறியுள்ளார். மேலும் முன்மாதிரியான எங்கள் வீரர்களின் தைரியத்திற்கும் நன்றி உணர்வினை உணர்த்துவதற்கும் வார்த்தைகள் பத்தாது எல்லையிலுள்ள எங்கள் வீரர்கள் குடும்பங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அவர் உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal