ஜனவரி 20 க்கு பின் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்ற பாடுபடுவோம் -கமலா ஹாரிஸ்!

ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்பதாக அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்க பாடுபடுவோம் என அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், 2020 ஆம் ஆண்டு மிக துயரமான ஆண்டாக அமைந்ததில் மாற்றுக்கருத்து இல்லை எனவும், கொரோனா வைரஸ் தாக்குதல், இனப்பாகுபாடு வரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி வேதனைகளை சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம், கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது துணிவாக பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஆகியோருக்குப் பாராட்டுக்கள் எனவும், 2021 ஆம் ஆண்டு எதிர் வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும் எனவும், சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

 

author avatar
Rebekal