யானைகளை பாதுகாப்போம் – உலக யானைகள் தினம் இன்று!

காடுகளின் பாதுகாவலன் யானைகளின் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

வனங்களிலும் சரணாலயங்களும் வாழக்கூடிய யானைகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம் டைனோசர் தான் என்று கூறப்பட்டாலும், அவைகள் தற்போது நாம் கண் காணும் விலங்குகள் அல்ல, அறிந்த விலங்குகளில் தற்பொழுது தரையில் வாழக்கூடிய மிகப்பெரிய விலங்கு என்றால் அது யானை தான். யானையில் பல்லாயிரக்கணக்கான யானைகள் இருந்தாலும் அவை இரண்டே வகைதான்.

ஒன்று ஆசிய யானைகள், மற்ற ஓன்று ஆப்பிரிக்க யானைகள். ஆப்பிரிக்க யானைகள் தான் பொதுவாகவே மிக பெரிய அளவில் காணப்படுகிறது. உலகில் இப்போது வரை 4,15,000ஆப்பிரிக்க யானைகள் உள்ளன.  40,000 முதல் 50,000 வரை ஆசிய யானைகளும் உள்ளன. அதிக அளவில் எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிந்தாலும் இவை அழிந்து வரக்கூடிய ஒரு விலங்கினமாகவே தற்போது அடையாளம் காணப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் யானைகளின் தந்தத்திற்காக அவைகளை வேட்டையாடுவது தான்.

யானைகளின் தந்தம் கோடி ரூபாய் மதிப்பில் தற்போதைய காலத்தில் விற்பனைக்காக வாங்கப்படுகிறது. யானை கருப்பு நிறமாக இருந்தாலும் அடிக்கடி பார்ப்பவர்களை கூட ஒருமுறை வந்தால் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய ஒரு விலங்கு என்றுதான் சொல்லியாக வேண்டும். அதிக அளவில் தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளக் கூடிய யானையால் பல காடுகளில்ஆரோக்கியம் நிலவுகிறது. ஒரு யானையால் 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும். யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் என்றால் அது தேனீ தான். மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையை விட யானையின் தும்பிக்கையில் உள்ள சதை அதிகமாகம்.

ஒரு யானை பிறக்கும் பொழுது 200 பவுன்ட் அதாவது 30 குழந்தைகள் பிறக்கும் பொழுது உள்ள எடைக்கு சமமாக பிறக்கும். 22 மாதங்கள் கர்ப்பமாகவே இருந்து குட்டியை ஈன்று எடுத்த பால் கொடுக்கக் கூடிய ஒரு விலங்கு யானை. ஒருமுறை உடையக்கூடிய இதன் தந்தம் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் எப்படி வலது கை இடது கை பழக்கம் உடையவர்கள் என்பதை கண்டறிய முடியுமோ அது போல யானைக்கும் கண்டறிய முடியும் என்பதே இதன் முக்கியமான சிறப்பு. தரையில் வாழும் விலங்குகளில் மிகப் பெரிய முளை கொண்ட விலங்கும் யானைதான்.

ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. அதிக நினைவாற்றல் கொண்ட மூளையை கொண்டது யானை. மிகச்சிறந்த கேட்கும் திறனும், நுகரும் திறனும் கொண்ட யானைக்கு கண்பார்வை சற்று கிட்டப்பார்வை தான். பார்வையை விட கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் தான்  நம்பி வாழ்கிறதாம். இத்தனை அரிய சிறப்பம்சம் கொண்ட இந்த விலங்கை அழிய விடாமல் காப்பது நம் கடமையாகும். அண்மை காலங்களாகவே நாகரிக வளர்ச்சிப் பணிகளுக்காக வெட்டப்படும் காடுகள், மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள் ஆக்கிரமிப்புகள், தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடுதல், விளையாட்டுத்தனமாக அண்மையில் கூட அன்னாசிப்பழத்தில் குண்டு வைத்து யானையை கொல்லுதல்  என மனிதர்களின் அலட்சியப் போக்கால் அழிந்து வரக்கூடிய இந்த அரிய வகை விலங்கினம் யானையை பாதுகாப்போம்.

நம்முடைய குழந்தைகளின் காலத்தில் யானை என்ற உயிரினம் இருந்தது என்று நாம் டைனோசரை சொல்வது போல சொல்லிக் காட்டக் கூடிய ஒன்றாக இல்லாமல், ஊர்வலமாக வரக்கூடிய யானையின் மீது குழந்தை ஏற்றிச் செல்லக் கூடிய வாகனமாக அமைய வேண்டுமானால் யானைகளை பாதுகாத்து பக்குவப்படுத்துவது மனிதர்களாகிய நமது கடமை. இயற்கை கொடுத்துள்ள அழகிய விலங்குகளை வாழவைப்போம், நாமும் வாழ்வோம்.

Rebekal

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

2 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

4 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

5 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

6 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

6 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

6 hours ago