லைகா – ஷங்கர் கலந்துபேசி இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் – நீதிபதிகள்

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் அவர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவால் இந்தியன்-2 படபிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. லைகா – ஷங்கர் கலந்துபேசி இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

இதற்கு விளக்கமளித்த இயக்குனர் ஷங்கர், ‘இந்தியன்-2 படத்தை ஆக்டொபருக்கு முடித்து தர முயற்சிக்கிறேன். ஜூன்-அக்டொபர் காலகட்டத்தில் ஃபிரீயாக இருப்பதால் முடித்து தார் முயற்சிப்பதாகவும், ராம்சரணுடன் அடுத்த ஆண்டு மே மாதம் தான் படம் இயக்க உள்ளதாகவும், நடிகர் விவேக் மறைவால், வேறு நடிகரை வைத்து காட்சிகள் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.