29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

தகர்க்கப்பட்ட உக்ரைன் அணை..பெருக்கெடுத்த வெள்ளம்..! அவசரநிலை அறிவிப்பு..!

தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச்...

நகை வாங்க சரியான நேரம்..! தங்கம் விலை சரிந்தது..சவரனுக்கு ரூ.296 குறைந்தது..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று அனைவரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது.

அதன்படி, நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.45,640-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை 3 ரூபாய் 3 காசுகள் எனக் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3,300 குறைந்து ரூ.ரூ.78,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.