மாஸ்டர் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளிய வக்கீல் சாப்..!!

மாஸ்டர் வசூல் சாதனையை வக்கீல் சாப் திரைப்படம் முறியடித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு இந்த ஆண்டு திரையரங்குகளில் 50% பார்வையார்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. நல்ல விமர்சனத்தையும் பெற்றது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் மாஸ்டர் திரைப்படம் 250 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில், இதைபோல் நடிகர் பவான் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் கடந்த 9 ஆம் தேதி 100 % பார்வையாளர்களுக்கு அனுமதியுடன் வெளியான திரைப்படம் வக்கீல் சாப். இப்படம் பாலிவுட்டில் அமிதாப் நடித்த பிங்க், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படங்களின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் 42 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் 35 கோடி தான் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் மாஸ்டர் சாதனையை வக்கீல் சாப் முறியடித்துள்ளது. மேலும் மாஸ்டர் திரைப்படம் 50 % பார்வையாளர்களுடன் வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.