அமெரிக்க இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் ஐபோன்!

  • அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவில் ஒரு இளைஞர் சிக்கி ஆற்றில் தனது காருடன் விழுந்துவிட்டார். 
  • தனது ஐபோன் உதவியுடன் அவசர அழைப்பை மேற்கொண்டு மீட்பு படையினர் மூலம் அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டார். 

தற்போது குளிர்காலம் என்பதால் பல நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் லோவா நகரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. அந்த பனிபொழிவில் ஒரு 20 வயது இளைஞர் தனது காரை ஒட்டி வந்துள்ளார். அப்போது கடும் பனிப்பொழிவு கார் கண்ணாடியை மறைத்தால், அருகில் இருந்த ஆற்றிற்குள் காரை இறக்கி விட்டார்.

ஆற்றில் உள்ள குளிர்ந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக காரின் உள்ளே புகுந்துள்ளது. இதனால் கார் மூழ்க தொடங்கியுள்ளது. இதில் பதட்டமடைந்த அந்த இளைஞர் தனது ஆப்பிள் ஐபோனில் ‘சிரி’ என்கிற மொபைல் ஆப்பை ஓபன் செய்து 911 என்கிற அவசர அழைப்பை மேற்கொண்டு தான் ஆற்றில் சிக்கிக்கொண்டதை கூறியுள்ளார். உடனே விரைந்த மீட்பு படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். அவசர நேரத்தில் தனது ஐபோன் உதவியது என அந்த இளைஞர் பெருமையாக பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.