விசா பிரச்சனை தீர்க்க வேண்டும்- பிரதமரிடம் லக்ஷ்யா சென் கோரிக்கை..!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரரும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான லக்ஷ்யா சென் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரிடம், ஜப்பான் மற்றும் சீனா ஓபன்களில் பங்கேற்க விசா பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

22 வயதான லக்ஷ்யா சென் ஜப்பான் விசா கிடைக்காததால் தனது ஏமாற்றத்தை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். லக்ஷ்யா சென்  பயிற்சியாளர் மற்றும் பிசியோ உட்பட அவரது அணியில் உள்ள மற்ற இரண்டு உறுப்பினர்கள் தங்கள் விசாவைப் பெறவில்லை என்று கூறினார். நவம்பர் 14 முதல் தொடங்க உள்ள ஜப்பான் மாஸ்டர்ஸ் 2023 இல் பங்கேற்க லக்ஷ்யா சென் நவம்பர் 11, சனிக்கிழமையன்று ஜப்பான் புறப்பட உள்ளார்.

லக்ஷ்யா சென் மற்றும் அவரது குழு அக்டோபர் 10 அன்று விசாவிற்கு விண்ணப்பித்தது ஆனால் இன்னும் அது கிடைக்கவில்லை என்று கூறினார். லக்ஷ்யா சென் தனது கடைசி போட்டியில் கடந்த மாதம் 2023 பிரெஞ்சு ஓபனில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

author avatar
murugan