#Breaking:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு – விசாரணை மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உதகை:கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்நிலையில்,இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகியுள்ள நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்மந்தமான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் ஆகிய இருவர்  ஆஜராகினர்.

இதனையடுத்து,இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவை என்ற வாதம் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.