கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சயான் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் மற்றும் சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராதில்லை. விசாரணையை முழுவதுமாக முடிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும், கோடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்தும் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்படை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், விசாரணை அதிகாரி வேல்முருகன் ஆகியோர் நீதிமன்றம் வந்துள்ளனர். இதுபோன்று அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜஹான், கனகராஜ் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்