தொடர் ஆட்டநாயகன் விருதை வென்ற கிங் கோலி ..!

இன்று நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

நடப்பு உலகக்கோப்பைக்கான தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 இந்திய வீரர்களும்,  2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இருந்தனர்.

இந்தியாவை வீழ்த்தி… 6-வது முறையாக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலியா ..!

அதன்படி நாமினி பட்டியலில் இந்திய வீரர்களில், விராட் கோலி , முகமது ஷமி , ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் , ஆடம் ஜம்பா, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், விராட் கோலி 2023 உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 11 போட்டிகளில் 765 ரன்கள் குவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் தொடர் ஆட்டநாயகன் விருது:

1992 – மார்ட்டின் குரோவ்
1996 – சனத் ஜெயசூர்யா
1999 – லான்ஸ் க்ளூஸ்னர்
2003 – சச்சின் டெண்டுல்கர்
2007 – க்ளென் மெக்ராத்
2011 – யுவராஜ் சிங்
2015 – மிட்செல் ஸ்டார்க்
2019 – கேன் வில்லியம்சன்
2023 – விராட் கோலி

தொடர் ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்கள்:

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 2003, யுவராஜ் சிங் 2011 ஆகிய உலகக்கோப்பைகளில் தொடர் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan