கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டச்சாலை பணிகள் : நகராட்சி நிர்வாகத்தை செயல்படுத்த கோரிக்கை…!!!

உடுமலை நகரம் கோவை – திண்டுக்கல் சாலை அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அணைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து போவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்நிலையில் திட்டச்சாலை அமைப்பதற்கான கருத்துரு நகராட்சி நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த கருத்துருவின்படி, தேசிய நெடுசாலையானது, நகர எல்லையில் மின்மயானம் அருகே பிரிந்து, செஞ்சுரி மலை ரோடு, பல்லடம், தாராபுரம் போன்ற மாநில நெடுஞ்சாலை தொட்டு, எஸ்.வி மில் அருகே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்டச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அளவீடு எடுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் இதை செயல்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment