இஸ்ரோவிடம் திரவ ஆக்சிஜன் வழங்கக்கோரி கேரளா கடிதம்..!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரம் தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரளா கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் டெல்லி உட்பட பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், 2-வது ஆலை கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து வாரம் தோறும் 10 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் வழங்குமாறு கேரளா கடிதம் எழுதியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக திரவ ஆக்சிஜனை வழங்க கேரள அரசு தலைமைச்செயலர் வி.பி ஜாய் இஸ்ரோவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

author avatar
murugan