அரசு பணியாளர் தேர்வில் ஒரே நேரத்தில் அம்மாவும், மகனும் தேர்ச்சி.! கேரளாவில் ருசிகரம்…

கேரளாவில், அரசு தேர்வாணையத்தின் கீழ் தேர்வெழுதி  அம்மா மகன் இருவருமே ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

 கேரளாவில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் அம்மா மற்றும் மகன் இருவருமே ஒரே நேரத்தில் தேர்வெழுதி பாஸ் ஆகி, இருவருக்கேமே அரசு வேலை கிடைத்துள்ளது.

கேரள, மலப்புரத்தை சேர்ந்த, பிந்து எனும் 42வயது அம்மாவும்,  விவேக் எனும் அவரது 24 வயது மகனும் ஒரே நேரத்தில் அரசு தேர்வாணையத்தில் தேர்வெழுதி உள்ளனர்.

விவேக்,  எல்டிசி பிரிவில், லோயர் டிவிஷனல் கிளார்க் வேலைக்கான தேர்வில், தேர்வெழுதி, 38வது ரேங்கிலும்,  பிந்து , எல்ஜிஎஸ் பிரிவில் லாஸ்ட் கிரேடு சர்வண்ட்ஸ் தேர்வில் 92 ரேங்கிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

“நானும் அம்மாவும், ஒன்றாக படித்தோம், ஆனால்,  இருவருமே ஒன்றாக தேர்ச்சி பெறுவோம் என்று நினைத்ததில்லை” என்று பிந்து அவர்களின் மகன் விவேக் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment