காலிமுக திடலை காலி செய்த இலங்கை போராட்டக்காரர்கள்.! வேறு வடிவில் போராட்டம் தொடரும்…

இலங்கை தலைநகர் கொழும்புவில், காலிமுக திடலில் போராடி வந்த போராட்டக்காரர்கள் முழுவதும் வெளியேறிவிட்டனர். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக,  மக்கள் போராட்டம் வெடித்தது. பொதுமக்கள் , மாணவர்கள் என  பல்வேறு போராட்ட குழுவினர் , கொழும்புவில் உள்ள காலிமுக திடலில் போராட்டம் ஆரம்பித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த போராட்டம் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து , அரசு மாளிகையில் போராட்டம், முக்கிய தலைவர்கள் ஓட்டம் , அரசியல் மாற்றம் என அடுத்தடுத்து உலக நாடுகளை உற்றுநோக்க வைத்தது.

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு,நிலைமை தற்போது கொஞ்சம் சரியாக ஆரம்பித்துள்ளது. போராட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

இறுதியாக காலிமுக திடலில் போராட்டக்கார்களை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதற்கு முன்னரே பல்வேறு அமைப்பினர் திடலை காலி செய்து வெளியேறிவிட்டனர்.

இதனை தொடர்ந்து, மீதமுள்ள போராட்டக்காரர்களும், கொழும்பு காலிமுக திடலில் இருந்து காலி செய்துள்ளனர். ஆனாலும், எங்கள் போராட்டம் வேறு வகையில் தொடரும் என கூறிவிட்டு தான் அங்கிருந்து போராட்டகாரர்கள் வெளியேறியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment