கேரளாவின் தங்க கடத்தல் விவகாரம்: மீண்டும் நான்கு போர் கைது.!

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் மீண்டும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ. 15 கோடி மதிப்பிலான 30கிலோ தங்கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும் பைசல் பேரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தேசிய புலனாய்வு நிறுவனம்(என்ஐஏ) மற்றும் சுங்கத்துறையால் நடத்தி வரும் விசாரணையில் 150கிலோ தங்கத்திற்கு மேல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனிடையே ஸ்வப்னா சுரேஷ் மூன்று முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து அதனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு தொடர்பாக முகமது அன்வர், ஹம்சத் அப்துல் சலாம், சம்ஜுமற்றும் அம்ஜித் அலி ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், இவர்களுக்கு சொந்தமான இடங்களான கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள 6 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் பல முக்கிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.