கண்ணூர் – திருவனந்தபுரம் விமானத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம்

கேரளா  முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை பயணம் செய்த விமானத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் முதலமைச்சர் பதவியிலிருந்து பினராயி விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனை கேரளா இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.சபரிநாதன் சமூக வலைதளங்களில் 3 வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் இருவர்  விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும், முதலமைச்சருடன் வந்த ஒரு நபர் … Read more

“சிறையில் என் உயிருக்கு ஆபத்து”- நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த ஸ்வப்னா சுரேஷ்!

சிறையில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட, 15 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஸை அண்மையில் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்றிரவுடன் காவல் முடிவடைந்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். அதனை விசாரித்த நீதிபதிகள், ஸ்வப்னா சுரேஷின் … Read more

தங்ககடத்தல் தகராறு-ஜாமீனில் ஸ்வப்னா-பாய்ந்தது வழக்கு-!பிடிவாரண்ட் பிறப்பிப்பு??

கேரள தங்க கடத்தல் விவகாரம் ஸ்வப்னா சுரேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு சுங்கத்துறை நடவடிக்கை. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமானநிலையத்தில் கடந்த ஜூலை 5ல் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்ததை  கையும் களவுமாக சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விவாகரம் விஷ்வரூபம் எடுக்கவே வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையில் எடுத்தது.சுங்கத் துறை மற்றும் அமலாக்கத் … Read more

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: 3 பேருக்கு “ப்ளூ கார்னர்” நோட்டீஸ் பிறப்பிக்க கோரிக்கை!

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 3 பேருக்கு “ப்ளூ கார்னர்” நோட்டீஸ் பிறப்பிக்க இண்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்பொழுது … Read more

கேரளாவின் தங்க கடத்தல் விவகாரம்: மீண்டும் நான்கு போர் கைது.!

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரத்தில் மீண்டும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ. 15 கோடி மதிப்பிலான 30கிலோ தங்கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் மற்றும் பைசல் பேரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய புலனாய்வு நிறுவனம்(என்ஐஏ) மற்றும் சுங்கத்துறையால் நடத்தி வரும் விசாரணையில் 150கிலோ தங்கத்திற்கு மேல் … Read more