இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்!

இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்!

இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில், 4-வது குஞ்சலி மரைக்கார் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளத்து பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.