காஷ்மீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணை

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில்  144 தடை உத்தரவு பிறப்பித்தது.மேலும் அங்கு தொலைபேசி சேவையையும் ரத்து செய்தது மத்திய அரசு.இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துகள் ரத்து செய்யப்பட்டதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது.இது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர் முகம்மது யூசுப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த  மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.அது மட்டும் இல்லாமல் அங்கு பத்திரிக்கையாளர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறி டைம்ஸ் இதழின் ஆசிரியர் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வருகிறது.