கலைஞர் நூற்றாண்டு விழா – முதலமைச்சர் நாளை ஆலோசனை!

M. K. Stalin
M. K. Stalin [Image Source : Twitter/@mkstalin]

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா வருகின்ற ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது.

கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக விவாதிக்க வரும் 20ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொள்கிறது.  இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.