எதிரிகளை வெல்ல நினைப்பவர்கள் செல்ல வேண்டிய கருடன் ஆலயம்..!

நாச்சியார் கோவில் -பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும் கருடனின் சிலை மரத்திலோ அல்லது உலோகத்திலோ தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் தான் கல்லால் செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் அமைந்துள்ள இடம் ,வழிபாட்டு முறைகள் அதன் வரலாறு பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

திருத்தலம் அமைந்துள்ள இடம்:

கும்பகோணத்தில் இருந்து குடை வாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார் கோவில் எனும் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நடை திறக்கும் நேரம் காலை 6- 12 மாலை 4-8 இந்த நேரத்தில் கோவில் திறந்திருக்கும்.

இக்கோவிலின் சிறப்பு:

இங்கு பெருமாள் அம்பாளுடன் ஒரே சொன்னதில் காட்சி தருகிறார். இது இக்கோவிலின் சிறப்பாகும். எல்லா பெருமாள் கோவில்களிலும் சுவாமிக்கு தான் முதல்  இடம் இருக்கும் ஆனால் இங்கு மட்டும்தான் அம்பாளுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது.

இந்த திருத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று, சோழ நாட்டின் 14வது திருத்தலம் ஆகும். ஒரு சனிக்கிழமை இங்கு வந்து வழிபாடு செய்தால் பதினாறு முறை திருப்பதிக்கு சென்ற பலன் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

திருத்தலத்தின் வரலாறு:

மேதாவி எனும் மகரிஷி பெருமாள்  மீது தீவிர பக்தியை கொண்டிருந்தார். அவரே தனக்கு மருமகனாகவும் மகாலட்சுமி மகளாகவும் பிறக்க வேண்டும் என தவம் புரிகிறார். இந்த தீவிர பக்தியை பார்த்த மகாலட்சுமி அவர் தவம் செய்த மரத்தின் கீழ் சிறுமியாக அவதரிக்கிறார்.

இதைப் பார்த்த மகரிஷி அந்த சிறுமிக்கு வஞ்சுளாதேவி என பெயர் சூட்டி வளர்த்து வருகிறார்.  திருமண வயது வருகிறது அந்த சமயத்தில் பெருமாள் ஐந்து வடிவங்களாக உருவெடுத்து மகாலட்சுமி தேடி வருகிறார், கருடன் தாயாரை கண்டுபிடித்து விட்டதாக பெருமாளிடம் கூறுகிறார் உடனே  பெருமாள் மேதாவி இடம் தங்கள் மகளை மணம் முடித்து கொடுக்குமாறு கேட்கிறார் .

மேதாவி  சில நிபந்தனைகளை  பெருமாளுக்கு விதிக்கிறார் ,அது என்னவென்றால் இக்கோவிலில் தன் மகளுக்கு தான் முதலிடம் கிடைக்க வேண்டும். இந்த ஊரில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும், தனக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

பெருமாளும் இதற்கு ஒப்புக்கொண்டு மனம் முடித்துக் கொள்கிறார். கருவறைக்குள் இருக்கும் அம்பாள் ஒரு அடி முன் நின்று பெருமாளுடன் திருமண கோலத்தில் காட்சிதருகிறார்

கருடனின் சிறப்பு:

பெருமாளின் வாகனமாகவும் ,கொடியாகவும் விளங்குவது கருடன் தான். வைணவ நீதிப்படி பெருமாள் கோவிலுக்கு சென்றால் கருணையை தான் முதலில் வழிபட வேண்டும். மேலும் மந்திரங்களில் சிறந்தது கருட மந்திரம் எனவும் கூறப்படுகிறது.

எதிரிகளை வெல்ல நினைப்பவர்கள் கருட பகவானை வழிபட்டு வரலாம். மேலும் இங்குள்ள கருட பகவானுக்கு தனி  சன்னதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கல் கருடன் பங்குனி மற்றும் மார்கழி மாதத்தில் சன்னதியில் இருந்து வெளியே கொண்டு வரப்படும் .

அப்போது சன்னதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல கருடனின் எடை கூடும் எனவும், திரும்பவும் சன்னதிக்கு உள்ளே எடுத்துச் சொல்லும் போது கல் கருடன் எடை குறையும் என ஆச்சரியமாக கூறப்படுகிறது. இது இக்கோவிலின் அதிசய நிகழ்வு.

மேலும் கருட பகவான் பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் இத்திருத்தலத்தில் திருமணம் நடத்தி வைத்ததால் இங்கு வந்து ஏழு வியாழக்கிழமை கருட பகவானுக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் ஐதீகம். சுவாதி நட்சத்திரம் மற்றும் ஆடி மாதம் வரும் கருட பஞ்சமி, வளர்பிறை பஞ்சமி அன்று கருடபெருமானை வழிபடுவது மிகச் சிறப்பு.

ஆகவே எதிரிகளை வெல்ல நினைப்பவர்கள் மற்றும் திருமண பாக்கியம் கிடைக்க விரும்புவர்கள் இத்திருத்தலத்திற்கு சென்று வாருங்கள்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment