கார்த்தியின் தேவ் காதலர் தினத்தில் வெளியாகிறது !!!!

நடிகர் கார்த்தி நடித்த முதல் திரைப்படம் ‘ பருத்திவீரன் ‘ஆகும். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா  இடம் பிடித்தவர். மேலும் சமீபத்தில் வெளிவந்த இவரின் ‘ தீரன் அதிகாரம் ஒன்று ‘ மற்றும் ‘ கடைக்குட்டி சிங்கம் ‘ ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

மேலும் தற்போது கார்த்தி இவ்விரு வெற்றி படங்களை தொடர்ந்து ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் ‘ தேவ் ‘ படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத்சிங் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ்ராஜ் முதலியவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாம். மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள்  சமீபத்தில் வெளியாகி வெற்றி கண்டது. இந்த படம் வரும் பிப்ரவரி 14 ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Comment