கார்த்திகை தீப திருவிழா – 2,500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இ  10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி மதியம் 2 மணி வரை, 2,500 பக்தர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மலையேறும் பக்தர்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுபோகக்கூடாது என்றும், தண்ணீர் பாட்டில்கள் மட்டும் கொண்டு போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment