பாஜக பாகிஸ்தானுக்கு செல்லட்டும்.! கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சனம்.!

காங்கிரசின் நடவடிக்கைகள் சிரமமாக இருந்தால் பாஜக பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து சித்தராமையா முதல்வராக இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் முதற்கட்டமாக பதவியேற்ற அமைச்சர் குழுவில் முக்கியமானவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே.

இவர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க நினைத்தால் சும்மா இருக்க மாட்டோம். அப்படி பஜ்ரங் தளம், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் எனவும்,

சட்ட ஒழுங்கு மீறப்பட்டால் அந்த அமைப்புகள் தடை செய்யப்படும் எனவும் பிரியங்க் கார்கே குறிப்பிட்ட்டார்.  ஒருவேளை இந்த தடை நடவடிக்கைகள் பாஜகவுக்கு சிரமமாக இருந்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என கடுமையாக விமர்சித்து இருந்தார் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.