கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் – 8.26% வாக்குப்பதிவு!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவு.

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் வாக்குபதிவில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்று, ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஒடிசாவின் ஜார்சுகுடா இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் சுவாரில் 7.93% வாக்குகளும், சான்பேயில் 10.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்