Today’s Live: கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை..! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

உள்ளுர் விடுமுறை:

கரூர் மகாமாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வரும் 31ம் தேதி புதன்கிழமை கரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கு மாற்றாக ஜூன் 3ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10.05.2023 4:11 PM

தேர்தல் களத்தில் பரபரப்பு:

கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு விஜயநகர் மாவட்டத்தில் மசபின்னலா கிராமத்தில் வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் திட்டமிட்டு அறைக்கு மாற்றியதாக தகவல் பரவியது. இதைதொடர்ந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள், அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தி, வாக்குபதிவு இயந்திரங்களை அடித்து உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

10.05.2023 3:45 PM

டாக்டர் வந்தனா தாஸ் கொலை:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரால் கத்தரிக்கோலால் குத்தப்பட்ட வந்தனா தாஸ், கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இறந்தார். இந்நிலையில், டாக்டர் வந்தனா தாஸ் கொலையை கண்டித்து ஹவுஸ் சர்ஜன்கள் சங்கம் சார்பில் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10.05.2023 1:35 PM

உள்கட்டமைப்பு திட்டம் :

ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் ரூ.5500 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ராஜஸ்தான் மக்களை நான் வாழ்த்துகிறேன். ராஜஸ்தானில் நவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

10.05.2023 12:40 PM

அண்ணாமலை மீது வழக்கு :

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திமுக சொத்துப்பட்டியல் (DMK Files) என்ற ஓர் வீடியோ பதிவை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். தற்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உள்துறை அனுமதியுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல்வருக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10.05.2023 12:00 PM

உழவர் சந்தைகளில் உணவகம்:

தமிழ்நாட்டில் உள்ள 25 உழவர் சந்தைகளில் மரபுசார் ஊட்டச்சத்து நிறைந்த தொன்மை சார்ந்த உணவகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையில், ‘மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, ஈரோடு கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்படுகிறது. சிறுதானிய சிற்றுண்டிகள், கூழ் வகைகள் போன்ற மரபு உணவுகளை இந்த உணவகங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

velan arasanai
velan arasanai Image Source TwitterNandiniGopalakrishnan

10.05.2023 11:30 AM

வேளாண் படிப்பு:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வேளாண் & மீன்வள படிப்பு உள்ளிட்ட 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேளாண் பல்கலை. கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன.

மேலும் படிக்க : வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!

10.05.2023 11:00 AM

கர்நாடகா தேர்தல்:

காங்கிரஸுக்கு 130 இடங்கள் கிடைக்கும் என்றும், 150 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

10.05.2023 10:30 AM

200% நம்பிக்கை:

கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் பழைய கட்சி ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி 141 இடங்களை கைப்பற்றும் என்று 200% நம்பிக்கை கொண்டுள்ளேன். அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

10.05.2023 10:15 AM

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.