அலட்சியமான அரசு மருத்துவமனைக்கு எதிராக இன்று 10,000 கடைகள் முழு அடைப்பு.!

விஷம் கொடுத்து உயிரிழந்த பள்ளி மாணவனின் உயிரிப்புக்கு அலட்சியமாக நடந்து கொண்ட அரசு மருத்துவமனையின் போக்கே காரணம் என காரைக்கால் மாவட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.  

சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய சம்பவம் என்றால் தன மகளுடன் படிக்கும் சக மாணவன் படிப்பில் தன் மகனை முந்திவிட கூடாது என சக மாணவியின் தாயார் அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்த கொலை செய்த சம்பவம் தான்.

இதில் தயார் சகாயராணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். விஷம் கொடுத்தது சகாயராணி என்றாலும், அதன் பின்னர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுக்காததால் தான் மாணவன் உயிரிழந்தான் என ஒரு குற்றசாட்டு பலமாக எழுந்துள்ளது.

அதன் காரணமாக மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழு அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறது. இதன் அறிக்கையை புதுசேரி அரசிடம் சமர்ப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. அலட்சியமாக செயல்பட்ட காரைக்கால் மருத்துவமனைக்கு எதிராகவும், மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாலும் அதனை சரி செய்ய அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் இந்த கடையடைப்பு  நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் சுமார் 10,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment