காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி… ஓர் பார்வை!

Kancheepuram : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் 6-ஆவது இடத்தில் இருப்பது காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தான். கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் அதே ஆண்டில் ஒருமுறை மட்டுமே மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், பின்னர் செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பு பிறகு மீண்டும் 2009-ல் இருந்து காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் தேர்தல்  நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் காஞ்சிபுரம் தொகுதியில் நான்கு முறை மட்டுமே தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்த தொகுதியானது பட்டியல் சாதியினர் மற்றும் பழக்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனி தொகுதியாகும்.

READ MORE- தென் சென்னை மக்களவை தொகுதி.. ஓர் பார்வை..!

2008ம் ஆண்டு மறுசீராய்வு:

கடந்த 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, இந்த காஞ்சிபுரம் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது, திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகியவை சட்டமன்றத் தொகுதிகளாக இருந்தது.

இதன்பிறகு மறுசீரமைக்கப்பட்ட காஞ்சிபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மற்றும் செய்யூர் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இதனடிப்படையில், 2009ம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் சிறப்பு:

6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ள காஞ்சிபுரம் மக்களவை தொகுதி நெசவுத்தொழிலுக்கு மிகவும் புகழ்பெற்றது. அந்தவகையில், காஞ்புரம் பட்டு மிகவும் பிரபலமானது. இதனால், பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடவைகளை நெய்கின்ற நெசவாளி மக்கள் காஞ்சிபுரத்தில் அதிகம் வசிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், புகழ்பெற்ற காஞ்சி காமாட்சி கோவில் போன்ற சிறப்பு வாய்த்தவைகளை அத்தொகுதி உள்ளடக்கியுள்ளது.

கள நிலவரம்:

2009ல் இருந்து நடந்த 3 மக்களவை தேர்தல்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2019ல் நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் என்பவர் வெற்றி பெற்று உள்ளார். இதில் குறிப்பாக 1951ல் முதல் முறையாக நடைபெற்ற காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில், காமன்வீல் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு 2006ல் இருந்துதான் தேர்தல் நடந்து வருகிறது. ஆனால், இதற்கு முன்பு செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 3, திமுக 3, அதிமுக 4, பாமக 2 சுயேச்சைகள் 2 முறை என வெற்றி பெற்றுள்ளன.

READ MORE- மத்திய சென்னை மக்களவைத் தொகுதி.. ஓர் பார்வை..!

கணிப்பு:

காஞ்சிபுரம் தொகுதியில் குறைந்த அளவிலேயே தேர்தல் நடைபெற்று உள்ளதால் பெரிதாக கணிக்க முடியாது. ஆனால், ஆரம்ப முதல் மறுசீரமைப்பை சேர்க்காமல் மொத்தமாக பார்த்தால் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இருந்தாலும், திமுக – அதிமுக இடையே தான் போட்டி நிலவும் என கணிக்கப்படுகிறது.

2019 தேர்தல் முடிவுகள்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது, காஞ்சிபுரம் தொகுதியில், திமுக க.செல்வம் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், திமுக வேட்பளர் க.செல்வம் 6,84,004 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.மரகதம் 3,97,372 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். எனவே, திமுக வேட்பாளர் திமுக க.செல்வம் 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொகுதிகள் வெற்றி தோல்வி
செங்கல்பட்டு ம.வரலட்சுமி (திமுக)
கஜேந்திரன் (அதிமுக)
திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி (விசிக )
திருக்கச்சூர் ஆறுமுகம் (பாமக )
செய்யூர் பனையூர் பாபு (விசிக)
எஸ். கனிதா சம்பத் (அதிமுக)
மதுராந்தகம் மரகதம் குமாரவேல் (அதிமுக )
மல்லை சத்யா (மதிமுக)
உத்திரமேரூர் க. சுந்தர் (திமுக)
சோமசுந்தரம் (அதிமுக )
காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக)
பெ.மகேஷ்குமார் (பாமக)

வாக்காளர் எண்ணிக்கை:

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தம்
846016 886636 294 1732946
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment