பாஜகவில் இணையும் கமல்நாத், அவரது மகன் நகுல்நாத்..?

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அடியாக அமைய உள்ளது. காரணம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ள மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் ஆகியோர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவில் இணைவது குறித்து கமல்நாத்துடமிருந்தோ அல்லது நகுல்நாத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. பாஜக செய்தித் தொடர்பாளரும், கமல்நாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகருமான நரேந்திர சலுஜா,  தனது எக்ஸ் தளத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல்நாத் புகைப்படத்தை பதிவிட்டு  “ஜெய் ஸ்ரீராம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில்,  காங்கிரஸ் எம்.பி.யான நகுல்நாத், தனது எக்ஸ் தளத்தில் உள்ள தனது சுயவிவர குறிப்பிலிருந்து ‘காங்கிரஸ்’ பெயரை  நீக்கினார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில்,நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கமல்நாத்திடம் பேசினேன். நேரு-காந்தி குடும்பத்துடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் எப்படி வெளியேறுவார் என்று எதிர்பார்க்க முடியும்?அப்படியொரு விஷயத்தை நாம் எதிர்பார்க்கவே கூடாது என்றும் அவர் கூறினார்.

மீண்டும் பிரதமர் மோடி.! பாஜக தேசிய கவுன்சில் 2 நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பெரும் அடியாக இருந்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் பல தலைவர்கள் பாஜகவிற்கு சென்றனர். முன்னாள் எம்எல்ஏ தினேஷ் அஹிர்வார் மற்றும் விதிஷாவைச் சேர்ந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராகேஷ் கட்டாரே ஆகியோர் பிப்ரவரி 12-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.

அதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான  மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரான அசோக் சவான் பிப்ரவரி 12 அன்று அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும், போகர் தொகுதியின் எம்எல்ஏ பதவியிலிருந்தும் ராஜினாமா செய்தார். அடுத்த நாளே பாஜகவில் சேர்ந்தார். பின்னர் பிப்ரவரி 15 அன்று, அவர் பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவர்களான பாபா சித்திக் மற்றும் மிலிந்த் தியோராவும் கட்சியில் இருந்து விலகியதை அடுத்து சவான் காங்கிரஸில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment