பிரதமர் பேச்சில் அதிகம் எதிர்பார்த்தேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.இதற்கு பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…