10 வருடத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இது தான் – கமல்ஹாசன்.!

தமிழ் சினிமாவே கொண்டாடி வரும் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 150 கோடிக்கு மேல் வசூலும், உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, இதன் வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய கமல்ஹாசன் “ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் நான் என ஒருவர் சொல்ல முடியாது. சினிமா தெரிஞ்சவங்களுக்கு அது தெரியும். நான் சினிமாவிற்குள் எதாவது வேலை கிடைக்கணும் என்று வந்தவன். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை.

எனக்கு நடிப்பை காட்டியவர் இயக்குனர் பாலசந்தர் தான். உங்களை மாதிரி டெக்னீசியன் ஆகணும்னு என்று நான் அவர்கிட்ட சொன்ன போது, அட, போடா. ஏன்டா ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் நான் வாங்கி தரேன். நீ நடி. அப்புறம் பாரு… என என்னை நடிக்க வைத்தவர்.

இதையும் படியுங்களேன்- நான் கற்பனையில் கூட நினைக்காததை கமல் கொடுத்து விட்டார் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி.!

cropped-th08kamal-1.jpg

பாலச்சந்தருடைய படங்களில் மட்டுமே வெவ்வேறு கதாபாத்திரங்களில் பண்ணிட்டு இருந்தா போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த 10 வருட காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் விக்ரம் படம் தான் . அதற்குக் காரணம் உதயநிதி ஸ்டாலின். மகேந்திரன், இவர்கள்கூட இருப்பதால்தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது” என தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment