,
Kalki 2898 AD

பிரம்மாண்டத்தின் உச்சம்! மிரள வைக்கும் ‘கல்கி 2898 AD’ முதல் நாள் வசூல்!

By

கல்கி 2898 AD : 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ‘கல்கி 2898 AD’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், கீர்த்தி சுரேஷ், சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்த காரணத்தால் படத்தின் மீது எல்லா மொழிகளில் இருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது.

படமும் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படத்திற்கு மக்களுக்கு மத்தியில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் படம் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dinasuvadu Media @2023