ஜீவா-அருள்நிதியின் கலக்கல் நடிப்பில் “களத்தில் சந்திப்போம்” டீசர்.!

ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “:களத்தில் சந்திப்போம்”.

மாப்ளசிங்கம் பட இயக்குனரான ராஜசேகரன் இயக்கும் இந்த படத்தினை சூப்பர் குட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்த படத்தில் மஞ்சிமா மோகன்,பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், ராதா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் கபடி வீரர்களாக நடித்துள்ளனர். நேற்றைய தினம் இந்த படத்தின் டீசரை விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா அவர்கள் வெளியிட்டனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.