4051 கடிதங்கள்.. 54 தொகுதிகள்… கலைஞர் கைவண்ணத்தில் புதிய நூல் வெளியீடு.!

2016ஆம் ஆண்டு வரையில் முரசொலியில் எழுதிய 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக தொகுத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை தொண்டர்களுக்கு எழுதுவது வழக்கம்.

அப்படி அவர் 1968 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் எழுதிய கடிதங்களை தொகுத்து, நூலாக வெளியிடயிட உள்ளனர். 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக தொகுத்து வெளியிட உள்ளனர். செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட உள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment