சிபிஐ மாநில மாநாடு.! திருவனந்தபுரம் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.!

கேரளாவில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வுகளை (அக்டோபர் 1) காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தொடங்கி வைத்தார். மாலையில், நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் … Read more

வாட்சாப்களில் வாந்தி எடுப்பவர்களை நினைத்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.! மு.க.ஸ்டாலின் பேச்சு.!

எந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளாமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. – டிவிட்டர் ஸ்பேசில் தமிழக முதல்வர் பேசியுள்ளார்.  வருடா வருடம் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக தமிழகத்தில் கொண்டப்பட்டு வருகிறது. நேற்று செப்டம்பர் 30 திராவிட மாடல் கடைசி நாள் என்பதால், முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் ஸ்பேசில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ திராவிடம் தமிழகர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. சமூக நீதியை நிலை … Read more

920 கோடி செலவில் தமிழக சுற்றுசூழல் மேம்பாட்டு பணிகள்.! முதல்வர் ஸ்டாலின் தகவல்.!

ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் மூலம் 920 கோடி நிதி கிடைத்துள்ளது. அதன் மூலம் தமிழக சுற்றுச்சூழல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தரகுன்றிய இடங்களை கண்டறிந்து, அதனை மேம்படுத்த உள்ளோம். – பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.  இன்று மாவட்டந்தோறும், பசுமை தமிழகம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்றது. அங்கு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். … Read more

4051 கடிதங்கள்.. 54 தொகுதிகள்… கலைஞர் கைவண்ணத்தில் புதிய நூல் வெளியீடு.!

2016ஆம் ஆண்டு வரையில் முரசொலியில் எழுதிய 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக தொகுத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட உள்ளனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை தொண்டர்களுக்கு எழுதுவது வழக்கம். அப்படி அவர் 1968 … Read more

சென்னையில் விழாக்களை சிறப்புடன் முடித்துவிட்டு புறப்பட்டார் பிரதமர் மோடி.!

சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, தற்போது சென்னையை விட்டு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. நேற்று 44வது சர்வதேச ஒலிம்பியாட் துவக்க விழா நடைபெற்றது. அதில், கலந்து கொள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி , நேற்று, மாலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன் பின்னர் , இரவு பாஜக நிர்வாகிகள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர்  … Read more