#Justnow:வரி ஏய்ப்பு தகவல் அளித்தால் 10% வெகுமதி – தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் வரி ஏய்ப்பு குறித்து வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கடந்த ஏப்ரல் 28,2022 அன்று நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான வணிக வரித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் பின்வரும் அறிவிப்பை வெளியிட்டார்:

“வணிகவரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.குறிப்பாக,வரி ஏய்ப்பு செய்வோர் குறித்து வணிகவரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும் வரி ஏய்ப்பினைக் கண்டுபிடித்து சிறப்பாக வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் வெகுமதி வழங்கப்படும்,இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”,என்று அறிவித்தார்.

இந்நிலையில்,வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,அரசு வணிக வரித் துறையால் நிர்வகிக்கப்படும் அனைத்துச் சட்டங்களின் கீழ் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதிகள் வழங்கும் திட்டமும்,தகவல் அளிப்பவர்களுக்கான வெகுமதிகளின் அளவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

  • ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள் ரூ.1,00,000-க்கு மிகாமல் தரப்படும்.அதே சமயம்,ஒரு அதிகாரி ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெற தகுதியுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும்,விதிவிலக்கான சந்தர்ப்பங்களில்,ரூ.4,00,000/ வெகுமதியாக இருப்பின்,ஒரு தனிப்பட்ட அதிகாரி அல்லது குழுவிற்கு அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தரப்படும்.

தனிப்பட்ட தகவல் தருபவர்கள்

  •  அரசு ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் தகவல் தெரிவித்தால் வசூல் செய்யப்படும் ரூ. 1 லட்சத்திற்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வரை வெகுமதி தரப்படும்.
  • மேலும்,இடைக்கால வெகுமதியாக 5% அல்லது ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment