#justnow:திரிபுரா முதல்வராக பதவியேற்ற மாணிக் சாஹா!

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்,பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை தலைமைக்கு தெரிவித்ததை, தொடர்ந்து பிப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.இதனைத் தொடர்ந்து,திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஏனெனில்,திரிபுராவில் 2021 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் 13 உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜகவின் வெற்றிக்கு மாணிக் சாஹா பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.இதனால்,பாஜகவின் திரிபுரா மாநிலத்தின் தலைவராக பிப்லப் குமார் தேப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகினது.

இதனையடுத்து, திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் திரிபுரா தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மாணிக் சாஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில்,திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சாஹா சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.அவருக்கு ஆளுநர் சத்ய தியோ நாராயண் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இது தொடர்பாக,திரிபுரா புதிய முதல்வர் மாணிக் சாஹா கூறுகையில்:”திரிபுராவின் முதல்வராக பதவியேற்க என்னை நியமித்ததற்காக பிரதமர் மோடி ஜி,மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நன்றி”, என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment