#Justnow:பரபரப்பு…15 கைத்துப்பாக்கிகள்;300 தோட்டாக்கள் – இரண்டு பயங்கரவாதிகள் கைது!

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வன்முறைகளும்,தீவிரவாத நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.இந்த நிலையில்,காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,அவர்களிடமிருந்து 15 கைத்துப்பாக்கிகள்,30 மெகசின்கள்,300 தோட்டாக்கள் மற்றும் 1 சைலன்சர் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து,அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது எனவும்,காவல்துறைக்கு இது மிகப்பெரிய வெற்றி எனவும் காஷ்மீர் ஐஜிபி தெரிவித்துள்ளார்.

இதனிடையே,கடந்த வெள்ளிக்கிழமை,ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா,”ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் காஷ்மீருக்கான விமானங்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து இயல்புநிலையின் அறிகுறிகளாக கருத முடியாது.இதனிடையே,காஷ்மீர் பண்டிட் ஊழியர்கள் பலர் தங்கள் வேலையை விட்டுவிட்ட,காஷ்மீரை விட்டு ஓடத் தயாராகும் அளவுக்கு பதற்றமான சூழல் உள்ளது”, என்று கூறியிருந்தார்.

மே 12 அன்று புட்காமின் சதூராவில் உள்ள உமர் அப்துல்லா அவர்களின் அலுவலகத்திற்குள் சமூக உறுப்பினரும் அரசு ஊழியருமான ராகுல் பட் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதில் இருந்து ஜம்மு-காஷ்மீர்,குறிப்பாக ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வடக்கு காஷ்மீரில் உள்ள இடங்களுக்கு பயங்கரவாதம் திரும்பி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment