வெறும் 3 பொருள் இருந்தால் போதும்… 90 கிட்ஸுக்கு மிகவும் பிடித்த பால் கோவா தயார்….!

பெரும்பாலும் 90 கிட்ஸ் எல்லோருமே அவர்கள் பள்ளியில் வளர்ந்து வந்த காலகட்டங்களில் கடைகளில் விற்கப்பட்ட சிறு சிறு தின்பண்டங்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த தின்பண்டங்கள் தற்பொழுது கிடைப்பதில்லை. இப்போது உள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவசரமாக தயாரிக்கக்கூடிய பொரிகள், மிட்டாய்கள் தான் தற்பொழுது விற்கப்பட்டு வருகிறது.

90 கிட்ஸ் காலத்தில் விற்கப்பட்ட உணவுகள் நாளடைவில் கண்களுக்கு தெரியாமல் மறைந்து போய்விட்டது. இருப்பினும் இந்த உணவுகளை எப்படி நாம் வீட்டிலேயே செய்து கொள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக பெட்டி கடை பால்கோவா என்று சொல்லப்படக்கூடிய பால்கோவா அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த பால்கோவாவை முக்கியமான மூன்று பொருட்கள் வைத்து வீட்டிலேயே எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பொட்டு கடலை
  • சர்க்கரை
  • நெய்

செய்முறை

இந்த பெட்டி கடை பால் கோவா மைதா மாவிலும் செய்யலாம், பொட்டு கடலையை பொடியாக்கி அந்த மாவிலும் செய்யலாம். இன்று நாம் பொட்டு கடலையில் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு கப் பொட்டு கடலை மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டி ஒன்றை வைத்து அரை கப் நெய் ஊற்றவும். நெய் நன்கு உருகியதும், அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். நெய்யுடன் பொட்டுக்கடலை மாவு நன்றாக சேர்ந்ததும் ஒரு தட்டில் நெய் தடவி இந்த மாவை கொட்டி நன்றாக அழுத்தி தட்டி வைக்கவும். மாவு நன்றாக செட் ஆகியதும் சதுரம் சதுரமாக கத்தியால் வெட்டி எடுத்தால் அட்டகாசமான பெட்டி கடை பால்கோவா தயார்.

author avatar
Rebekal