தலைநகரில் மலராமல் போன தாமரை…தீர்ப்பை ஏற்றுகொள்கிறோம்…நட்டா!!

தலைநகர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.இந்நிலையில் அங்கு 3வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சிக்கட்டில் ஏறுகிறது.இதில் தோல்வியடைந்துள்ள  பாஜக அதன் தலைவர் ஜே.பி. நட்டா தனது இதுகுறித்து ட்விட்டரில்  வெளியிட்டுள்ள பதிவுகளில் மக்களின் தீர்ப்பை ஏற்கொள்கிறோம்,டெல்லி சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும் ,சட்டப்பேரவையில் பொது பிரச்னையை பாஜக தொடர்ந்து எழுப்பும் , தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு கெஜ்ரிவால் அரசு பணியாற்றும் என்று நம்புவதாக தனது ட்விட்டர் பதிவுகளில் ஜே.பி. நட்டா கூறி உள்ளார்

author avatar
kavitha