கடினமான கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்…! பதிலளிக்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் மீது சானிடைசரை ஊற்றிய பிரதமர்…!

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அவர்கள் மீது சனிடைசர் தெளித்த தாய்லாந்து பிரதமர்.

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், 2014-ம் ஆண்டு ராணுவ புரட்சியின் போது, கிளர்ச்சியை தூண்டியதாக பிரயுத் சான் ஓச்சாவின் அமைச்சரவயை சேர்ந்த 3 மந்திரிகள் மீது அப்போது வழக்கு தொடரப்பட்டது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான இடங்களுக்கு வேட்பாளர் பட்டியல் குறித்த கேள்விகளை எழுப்பினர்.

இதற்கு பிரதமர் பிரயுத் பதிலளிக்காமல், அவர்களிடம் வேறு ஏதாவது கேள்வி உள்ளதா? எனக்கு தெரியாது, நான் இன்னும் அதனை காணவில்லை. இதை நான் ஒரு நாட்டின் பிரதமர் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமா? என்று கேட்டுள்ளார். பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அவர்கள் மீது சனிடைசர் தெளித்துள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.