நாடு முழுவதும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் பறிமுதல்…!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் குறிப்பிட்ட மூலப்பொருளை சேர்க்க இந்திய மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள அந்த நிறுவனங்களில் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மும்பையில் 200 மெட்ரிக் டன்னும், இமாச்சலில் 82 ஆயிரம் கிலோ பவுடரும் கைப்பற்றப்பட்டது. இதனை பரிசோதித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம், இந்த பவுடரில் உள்ள மூலப்பொருளை மறு அறிவிப்பு வரும் வரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் வினியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து இருந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்பு, சோப்பு,ஆயில் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் அதே வேளையில் அந்த நிறுவனமும் தங்களது பொருட்களை திரும்பப்பெறுகின்றன. இதனிடையே தாங்கள் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் பாதிப்பற்றவை என்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment