மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன்,கமலா ஹாரிஸ்.! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய ட்வீட்.!

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.  அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்  ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .

இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் ,இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி வித்தியாசமான பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மூக்குத்தி அம்மனாக நடித்துள்ள நயன்தாரா ஆசி வழங்குவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் . இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது .ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் நவம்பர் 14-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

4 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

13 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

14 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

14 hours ago