B.Com, CA முடித்திருந்தால் அனல் மின் நிலையத்தில் வேலை…35 ஆயிரத்திற்கும் மேல் சம்பளம்.!

PSPCL: பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (PSPCL) காலியாக உள்ள கணக்காளர் அதிகாரி, உதவி மேலாளர், வருவாய் கணக்காளர், உள் தணிக்கையாளர் என பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பஞ்சாபில் உள்ள அதிக திறன் கொண்ட அனல் மின் நிலையமாகும். இது அம்மாநில அரசுக்கு சொந்தமான  மின்சார உற்பத்தி மற்றும் விநியோக செய்யும் நிறுவனமாகும்.

தற்பொழுது, அந்த நிறுவனத்தில் உள்ள காலியிட விவரங்களில் நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து அதிகாரபூர்வ இணையத்தளமான https://pspcl.in/ விண்ணப்பிக்கலாம்.

READ MORE – B.Sc முடித்திருந்தால் போதும் தோட்டக்கலை அதிகாரி வேலை.! உடனே விண்ணப்பியுங்கள்…

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 05-03-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26-03-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.1416 என்றும், ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.885 எனவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

ஆன்லைன் பேமெண்ட்

காலியிட விவரங்கள்:

கணக்காளர் அதிகாரி (AO) – 15 (CA, ICWA)
உதவி மேலாளர் (AM,HR) – 04 (MBA)
வருவாய் கணக்காளர் (RA) – 24 (CA, ICWAI, B.Com, M.Com)
உள் தணிக்கையாளர் (IA) –  51 (CA, ICWA, B.Com, M.Com)

READ MORE – SCCL ஆட்சேர்ப்பு: மொத்தம் 272 காலியிடம்…டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை.!

வயது வரம்பு

18 வயது முதல் 37 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்

  1. உதவி மேலாளர்/HR பதவிக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.47600 வழங்கப்படும்.
  2. வருவாய் கணக்காளர் பதவிக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.35400 வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அல்லது குறைக்க PSPCL க்கு உரிமை உள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் பஞ்சாப் சிவில் சர்வீசஸ் (பெண்களுக்கான இட ஒதுக்கீடு) விதிகள் 2020 மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தலின் படி நிரப்பப்படும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment