தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.!

Jharkhand : பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நோக்கி செல்லும் அங்க எக்ஸ்பிரஸ் (Anga Express) ரயில் நேற்று இரவு 7 மணி அளவில், ஜார்கண்ட் மாநிலம் வித்யாசாகர் – காசிதர் பகுதிக்கு இடையே சென்று கொண்டு இருக்கும் போது அந்த ரயிலில் தீ பற்றியதாக வதந்தி பரவியுள்ளது.

தீ பற்றியதாக வதந்தி பரவியதும், சில பயணிகள் ரயிலின் அவசரகால சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி வெளியில் ஓடியதாக தெரிகிறது. அப்போது இன்னொரு தண்டவாளத்தில் வந்த உள்ளூர் ரயில் தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இதில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ReadMore – அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!

விபத்தை குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு,  ரயில் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஜம்தாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில்,  தீ பரவியதாக பரவிய வதந்தியால் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கியுள்ளனர் என்றும், அப்போது அந்த வழியாக ஓடிக்கொண்டிருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியது.  ரயில் மோதி பலியானவர்கள் பயணிகள் அல்ல என்றும், தண்டவாளத்தில் நடந்து சென்ற வேறு மக்கள் மீது தான் ரயில் மோதியது என்றும்  கூறியுள்ளார்.

READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

மேலும், தீ விபத்து ஏதும் அங்க எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்படவில்லை. தற்போது வரை இரண்டு உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்கள் பயணிகள் அல்ல. அவர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள். இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு ரயில்வே அதிகாரி கவுசிக் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

READ MORE- பிரதமர் உரை… அதுதான் அவர்களுக்கு தெரிந்த நாகரீகம்.! கனிமொழி எம்பி பேட்டி.!

தண்டவாளத்தில் ரயில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,  பிரதமர் மோடி தங்கள் இரங்கலை பதிவிட்டு உள்ளனர். ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், விபத்து குறித்த தனது  வருத்தத்தையும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment