இன்றைய ராசிபலன்கள் .!உங்களுக்கு இந்த நாள் எப்படி இருக்கும்?

Today Horoscope – மாசி மாதம் 17ஆம் தேதி [பிப்ரவரி 29,2024] காண ராசி பலன்களை இங்கே காணலாம்.

மேஷம்:

உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இது ஏற்ற நாள், இன்று முக்கிய முடிவுகள் எடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் பணிக்கு மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் நேரம் செலவிடுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

இன்று மிகவும் அனுகூலமான நாள். புதிய வேலை வாய்ப்புகள் நிறைந்து காணப்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும் .உங்கள் நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

இன்று ஆக்கபூர்வமான நாளாக அமையாது .சிறிய பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். உங்கள் பணிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக தவறுகள் செய்ய நேரலாம். உங்கள் துணையுடன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் .பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:

இன்று நீங்கள் விழிப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். உங்கள் துணையுடன் கவனம் அற்ற வார்த்தைகளை பேசுவீர்கள். பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உணவில் கவனம் செலுத்தவும்.

சிம்மம்:

இன்று உங்களிடம் நம்பிக்கை நிறைந்திருக்கும். உங்கள் பணியை சிறப்பாக செயலாற்றுவீர்கள். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பை வெளிப்படுத்தி பழகுவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

இன்று எதிர்பார்க்கும் பலன் கிட்டாது. நெருக்கமானவர்களுடன் உரையாடும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பணியிட சூழல் கடினமாக இருப்பதாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் எழும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

துலாம்:

இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். உங்கள் பணியை திட்டமிட்டு கவனமாக பணியாற்ற வேண்டும் .உங்கள் துணையுடன் அகந்தை போக்கை தவிர்த்து சகஜமாக இருக்க வேண்டும். இன்று பண வரவு குறைந்து காணப்படும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

உங்கள் தினசரி செயல்களை ஒழுங்கு முறையுடன் மாற்ற வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறந்தது. உங்கள் பணியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் துணையுடன் இன்று மகிழ்ச்சியான நிலைமை இருக்காது. சிறிது கடன் வாங்க நேரிடலாம். இன்று மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு:

இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணியில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் துணை உடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு காணப்படும் ,ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் கடினமான  உழைப்பிற்கு மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். இன்று நிதி நிலைமை சுதந்திரமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.

கும்பம்:

இன்று சற்று அனுகூலம் குறைந்து காணப்படும், உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்கள் மூலம் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் துணையுடன் அனுசரித்து போகும் அணுகுமுறை தேவை. தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம் .ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்:

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டு உங்கள் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பணி இடத்தில் சக பணியாளர்களால் சில தொல்லைகள் ஏற்படும் .உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று பண வரவு செலவு  கலந்து இருக்கும். பதட்டம் காரணமாக ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.

Leave a Comment