கீர்த்தி சுரேஷை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி! வைரலாகும் வீடியோ!

ஜெயம் ரவி தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம். படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்துக்கு 4 கோடி சம்பளமா? இனிமேல் உயர்த்தி கேட்க வேண்டும் – ராஷ்மிகா.!

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷன்காக பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி இருவரும் கலந்துகொண்டு படத்தினை பற்றி பேசியுள்ளார்கள்.

அப்போது அந்த பேட்டியில் ஜெயம் ரவியிடம் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்த அனுபம் குறித்து பேசினால் எப்படி பேசுவரோ அதே போலவே பேசி காமிங்கள் என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு கீர்த்தி சுரேஷ் போலவே இந்த படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்பது போல பேசினார். ஜெயம் ரவி தன்னை போல பேசியதை பார்த்த கீர்த்தி சுரேஷ் வயிறு குலுங்க சிரித்து கொண்டே இருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment