கமல்ஹாசனுக்கு பிறகு 9 வேடங்களில் நடித்து சாதனை படைத்த ஜெயம் ரவி

நடிகர்  ஜெயம் ரவி தற்போது தனது 24-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே கதாநாயகியாக  நடித்து வருகின்றனர். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்த படத்திற்கு “கோமாளி “என பெயரும் வைக்கப்பட்டுள்ளது. “கோமாளி ” படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.
ஜெயம் ரவி நடிக்கும் இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.”தசாவதாரம்” திரைப்படத்தில்  கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து சாதனை படைத்து உள்ளார்.
author avatar
murugan

Leave a Comment